#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவி வரும் விஜய் மக்கள் இயக்கம்!"
தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். ஆரம்பகாலங்களில் உருவகேலிக்கு ஆளாகி சரியான வழி கிடைக்காமல் இருந்த விஜய், ஒரு கட்டத்தில் தனக்கான பாதையை உருவாக்கி இன்று கோலிவுட்டின் அசைக்க முடியாத ஹீரோவாக உருவாகியுள்ளார்.
கடந்த அக்டோபரில் வெளியான இவரது "லியோ" திரைப்படம் உலக அளவில் பிளாக் பாஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை சூசகமாக உறுதிப்படுத்தி வருகிறார். முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதையடுத்து விஜய் நூலகம் மற்றும் விஜய் பயிலகம் ஆகியவை தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினரால் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது விலையில்லா ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் மூலம் உணவு மற்றும் பழங்களை இன்று வழங்கினர்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் கூறியதாவது, "தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் பழங்களும், குழந்தைகளுக்கு முட்டை, ரொட்டி, பால் ஆகியவையும் வழங்கப்பட்டன." என்று கூறப்பட்டுள்ளது.