திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் மக்கள் இயக்க முக்கியப்புள்ளிக்கு உடனலக்குறைவு; மருத்துவமனைக்கு விரைந்த விஐய்..!
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருபவர் புஸ்ஸி ஆனந்த்.
இவர் நடிகர் விஜயுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து, தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் சிகிச்சைக்காக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
லோகேஷுடன் - விஜய் | லியோ திரைப்பட படப்பிடிப்பு
கடந்த சில வாரங்களாவே லியோ வெளியீடு விழா, விஜய் மக்கள் இயக்கப்பணி, லியோ வெற்றிவிழா பணிகள் என தொடர் வேலையால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
புஸ்ஸிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியான தகவல் அறிந்த நடிகர் விஜய், மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
புஸ்ஸி ஆனந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.