திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று நேரில் சந்திக்கிறார் நடிகர் விஜய்..!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரை ரசிகர்கள் இளைய தளபதி, தளபதி என்று அன்போடு அழைப்பது வழக்கம். இவர் விஜய் மக்கள் இயக்கம் கட்சியையும் நடத்தி வருகிறார்.
அவ்வப்போது விஐய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் 3 மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இதனால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பனையூருக்கு விரைந்துள்ளனர்.
தங்களின் சினிமா நட்சத்திரத்தை ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துவிடமாட்டோமா? என்ற எண்ணத்தில் ரசிகர்களும் அங்கு குவிய தொடங்கியுள்ளனர்.