திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. இத்தனை கோடியா!! லியோ படத்திற்காக தளபதி விஜய் வாங்கிய சம்பளம்.! எவ்வளவு தெரியுமா??
சினிமா துறையில் தற்போது முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த நிலையில் இன்று லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாவதற்கு முன்பே 150 கோடி லாபத்தை ஈட்டியது. இந்நிலையில் லியோ படத்திற்காக விஜய் 130 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல்கள் பரவி வருகிறது.