#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ட சேட்டன், சேச்சி.. கேரள ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிய தளபதி விஜய்.! மாஸ் செல்ஃபி வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லியோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, லைலா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய்யை காண நாள்தோறும் கேரள ரசிகர்கள் படப்பிடிப்பு தளங்கள், மற்றும் நடிகர் விஜய் செல்லும் இடங்களில் இரவு பகல் பாராமல் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தன் மீது அன்பு மழையை பொழியும் கேரளா ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அதாவது நடிகர் விஜய் வாகனத்தின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார். மேலும் அவர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி அசத்தியுள்ளார். நடிகர் விஜய் கேரள ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
Ente Aniyathimaar , aniyanmaar, chettanmaar, chechimaar ammamaar!
— Vijay (@actorvijay) March 22, 2024
Ella Malayalikalkkum ente Hridayam Niranja Nanni 🤗 pic.twitter.com/axmw72aOls