மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னோட டைரக்டர், நானே செய்கிறேன்! சொன்னதை நிறைவேற்றிய நடிகர் விஜய் சேதுபதி! என்ன தெரியுமா??
தமிழில் ஈ, இயற்கை, பேராண்மை போன்ற ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ஜனநாதன். இவர் இறுதியாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் படத்திற்கான எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில் சாப்பிட்டு வருவதாக வீட்டிற்கு சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
அதனை தொடர்ந்து அவரது உதவியாளர் வீட்டிற்கு சென்று பார்த்த நிலையில், ஜனநாதன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.
இயக்குனர் ஜனநாதனின் மறைவு செய்தி கேட்ட விஜய் சேதுபதி கதறி அழுதுள்ளார். பின்னர் அவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு கண்கலங்கியுள்ளார். இதற்கிடையில் ஜனநாதன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போதே, தனது இயக்குனரின் மீது மிகுந்த அன்பு கொண்ட விஜய் சேதுபதி என் இயக்குனரின் மருத்துவ செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என வாக்களித்துள்ளார். அதன்படி அவர் மொத்த மருத்துவ செலவையும் ஏற்றுக் கொண்டு, மருத்துவமனை பில் அனைத்தையும் செட்டில் செய்து முடித்துவிட்டார் என தகவல்கள் பரவி வருகிறது.