53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக இந்த முன்னணி நடிகரா.! வெளியான நம்பமுடியாத செம மாஸ் தகவல்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தளபதி விஜய். மேலும் அவருக்கு என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதுமட்டுமின்றி அவருக்கென ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர். தளபதி விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது என அறிவிப்பு வெளிவந்தநிலையில் படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் அத்திரைப்படம் கோடை விடுமுறையில் வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தளபதி 64 ஆவது படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.