மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதலை படப்பிடிப்பிற்கு வர மறுக்கும் விஜய் சேதுபதி.. கோபமடைந்த வெற்றிமாறன்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முதன் முதலில் 'பீட்சா' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவ்வாறு பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வெற்றி கதாநாயகனாக வலம் வந்தார் விஜய் சேதுபதி. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த 'விடுதலை' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார். இப்படத்தில் அனைவரது நடிப்பும் பாராட்டப்பட்டு மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
இதன்படி 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி கால்சீட் பிரச்சனை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் வெற்றிமாறன் கோபமாக இருக்கிறார்" என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது