திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. நடிகர் ஷாருக்கானுக்கு நம்ம விஜய் சேதுபதி வில்லனானது இப்படிதானா.! நயன்தாரா திருமணம்தான் காரணமா?? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீசாக உள்ளதாம். இந்த நிலையில் அந்த படத்தில் விஜய் சேதுபதி எப்படி வில்லனானார் என்பது குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
அதில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி,அனிருத் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமண விழாவில் ஷாருக்கானை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, 'உங்களது படத்தில் நான் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன்' என நேரடியாக கூறியுள்ளாராம். உடனே ஷாருக்கானும் இயக்குனர் அட்லியை அழைத்து ஜவான் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக்கிவிடலாமா? என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்லி விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்துவிட்டாராம். ஜவான் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.