மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்கள்னா இப்புடி இருக்கனும்; என்னமா செஞ்சிருக்காங்கயா! ! பூரிப்பில் மக்கள் செல்வன்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குன்றத்தூர் ஜூங்கா ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் அருமையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதனை விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. இவர்மட்டுமல்ல இவரது ரசிகர்களும் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
வானுயர கட்அவுட் வைத்து மாலை அணிவதும், அண்டாவில் பால் அபிஷேகம் செய்வதும், முதல் நாள் நள்ளிரவில் ரசிகர்கள் சிறப்பு காட்சி பார்ப்பதும், வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதும் தான் ஒரு ரசிகனின் கடமை என நினைப்பவர்களுக்கு இது நல்ல பாடம். அவர்களுக்கு மட்டுமல்ல, ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கும் தான்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் 'ஜுங்கா' நற்பணி இயக்கத்தினை நடத்தி வருகின்றனர். அந்த இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இந்த விழிப்புணர்வு வீடியோவை தயாரித்துள்ளனர்.
தன் ரசிகர்களின் இந்த முயற்சியை பாராட்டும் விதமாக இந்த வீடியோவை விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். உங்களின் நலன் கருதி அந்த வீடியோவை நாங்கள் இங்கு பதிவு செய்கிறோம். உங்களுக்கு யார் மேலெல்லாம் அக்கறை உள்ளதோ அவர்களுக்கெல்லாம் மறக்காமல் இதை பகிருங்கள்.