ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இதனாலேயே நான் வடசென்னை படத்தை பார்த்ததில்லை.! செம வருத்தத்தில் நடிகர் விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா??
இந்திய சினிமாவில் பல வெற்றிபடங்களை கொடுத்து முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். அவர் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. விடுதலை படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்பொழுது பேசிய விஜய் சேதுபதி கூறுகையில், இந்த படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் என்னை 8 நாட்கள் ஆடிஷன் செய்தார். அவ்வாறு ஆடிஷன் செய்த ஒரே இயக்குநர் அவர் மட்டும்தான். அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது.
வடசென்னை படத்தை மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் என்னிடம் உள்ளது. அதனால் அந்தப் படத்தை இதுவரை நான் பார்த்தது கிடையாது. அதை பார்த்தால் வருத்தம் அதிகமாகும் என்பதால் இப்படியொரு முடிவு. இதனை வெற்றிமாறனிடமுமே நான் கூறியுள்ளேன். அவர் தற்போது வடசென்னை 2வுக்கான கதையை எழுதிக்கொண்டுள்ளார். கண்டிப்பாக அதுவும் மிகவும் சிறப்பாக வரும் என கூறியுள்ளார்.