அப்போ செம மாஸ்தான்.! மீண்டும் உலக நாயகனுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்.! வெளிவந்த சூப்பர் தகவல்!!



Vijay Sethupathi may act in kamal next movie

தமிழில் குறுகிய காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மிரட்டலான வில்லனாகவும் நடித்து மிரள வைத்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இறுதிக்கட்டத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் ரசிகர்களை மிரள வைத்தது. இந்நிலையில் நடிகர் கமல் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

vijay sethupathi

கமலின் 233 வது படமான இதன் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறாரா? என்பது குறித்து விரைவில் தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.