மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி! என்ன கோரிக்கை வைத்துள்ளார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனது திறமையால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
விஜய் சேதுபதி தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி அங்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு கட்டணமாக முதலில் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். இதனைக்கேட்ட முதல்வர் ரங்கசாமி இதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.