#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருட்டு கதையில் நடித்திருக்கிறாரா விஜய் சேதுபதி.? விஜய் சேதுபதியை சுற்றிவளைத்த பஞ்சாயத்து.?
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு வெற்றி படங்களை அளித்து வருகிறார். இவரின் நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நடித்து சிறு தினங்களுக்கு முன்பு வெளியான "யாதும் ஊரே யாவரும் கேளிர்" திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரேகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈழ தமிழர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் திரையரங்கில் ஓடுவதற்கு தடை செய்ய வேண்டும் எனவும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" திரைப்படத்தின் கதை எனது நாவலில் இருந்து எடுக்கப்பட்ட கதையாகும் என்று பிரபல எழுத்தாளர் பதி நாதன் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.