மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்முறையாக பிரபுதேவாவுடன் இணைந்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக பிரபலமானவர் பிரபுதேவா. மேலும், இதனைத் தொடர்ந்து விஜயை வைத்து போக்கிரி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.
அதன் பின்னர் பாலிவுட் சினிமாவுக்கு சென்ற பிரபுதேவா சில ஹிட் படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததால் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவின் 60-வது திரைப்படத்தை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார். Wolf என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், பிரபுதேவா உடன், ராய் லட்சுமி அனுசுயா பரத்வாஜ், ரமேஷ் திலக், வசிஷ்டா, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் ஹிப்னாடிக் க்ரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் வழியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்கிள் மால்ட்டோ' என்ற பாடலை பிரபல நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.