மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எந்தவித விளம்பரமும் இன்றி விஜய் சேதுபதி செய்த நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டுகள்.!
தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக, மாஸ் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து, இந்தியளவில் கவனம் பெற்றுவருகிறார். சினிமாவில் ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் கலக்கிவருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இவரின் பவானி கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித விளம்பரமும் இன்றி ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.