மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவியாய் தவிக்கும் விஜய்..! வெளிநாட்டில் சிக்கியிருக்கும் அன்பு மகன்...! நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு..!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பெப்சி அமைப்பிற்கும், நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய்யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவராததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்கள் மட்டும் இல்லை தளபதி விஜய்யும் மிகுந்த சோகத்தில் உள்ளாராம். காரணம், அவரது மகன் சஞ்சய் கன்னடாவில் படித்துவருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கன்னடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருந்தாலும் மகன் தனியே இருப்பது சற்று வருத்தம்தான் என்றாலும், சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது.