தந்தைக்கு பெருமை சேர்த்த விஜய்யின் மகன்! என்ன செய்துள்ளார் தெரியுமா?



Vijay son sanjay junction short film full video

தமிழ் சினிமாவின் சகாபாதம், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர்தான் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் சந்திரசேகர் மகன்தான் விஜய். தந்தைவழியில் விஜய் எவ்வாறு வந்தாரோ அதே வழியில் இன்று விஜய் மகன் சஞ்சய் சினிமா துறைக்குள் அடியெடுத்துவைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், ‘ஜங்ஷன்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

ஃபிலிம் மேக்கிங் குறித்து படித்து வரும் சஞ்சய் அவரது படிப்பு முடிவடைந்த நிலையில், இந்த குறும் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் அந்த படத்தின் முழு வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.