மகன் செய்த காரியத்தால் கண்ணீர் விட்ட நடிகர் விஜய்! என்ன நடந்தது தெரியுமா?



vijay-son-sanjay-makes-vijay-cry

தமிழ் சினிமாவின் சகாப்தம், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர்தான் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் சந்திரசேகர் மகன்தான் விஜய். தந்தைவழியில் விஜய் எவ்வாறு வந்தாரோ அதே வழியில் இன்று விஜய் மகன் சஞ்சய் சினிமா துறைக்குள் அடியெடுத்துவைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜயுடன் நடனம் ஆடியிருப்பர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய், ‘ஜங்ஷன்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Junction short film

ஃபிலிம் மேக்கிங் குறித்து படித்து வரும் சஞ்சய் அவரது படிப்பு முடிவடைந்த நிலையில், குறும் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் புதிய யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ள சஞ்சய் அதில் தானே இயக்கி, நடித்துள்ள முதல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ஜங்ஷன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தனது மகனின் திறமையை பார்த்து நடிகர் விஜய் கண்ணீர் விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சஞ்சய் விஜய் பார்ப்பதற்கு தந்தை விஜய் போலவே இருப்பதால் இவரை விரைவில் வெள்ளித்திரையில் நடிகராக பார்க்கலாம்.

‘ஜங்சன்’ குறும்படத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…
https://youtu.be/z4_KGClxYBM