கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்ன்னா? இதையும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.! - நடிகர் ஆதி.!
பள்ளி படிப்பை முடித்த இளைய தளபதி விஜயின் மகள்.. அடுத்த என்ன செய்யப் போகிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து இளைய தளபதி எனும் பெயர் பெற்றிருக்கிறார். இவரின் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த விஜய் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
'லியோ' திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இது போன்ற நிலையில், தற்போது விஜயின் மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
இதனையடுத்து விஜயின் மகன் பள்ளி படிப்பை முடித்த தன் தங்கைக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பிறகு விஜயின் மகள் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.