மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் கடைசியாக சாதனை படைத்த படம் இதுதானா!!-வருத்தத்தில் ரசிகர்கள்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஒரு முன்னணி நடிகர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய சாதனைகள் படைக்கும்.
தற்போது விஜயின் 63 வது படமாக அட்லீ இயக்கும் படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அந்த படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்து வருகிறது, கண்டிப்பாக படம் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கடைசியாக விஜய் படம் ஒன்று ஒரு சாதனை செய்துள்ளது.அந்த படம் எதுவெனில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படம். துப்பாக்கி திரைப்படம் 2012ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. சிவாஜி (2007) மற்றும் எந்திரனுக்குப் (2010) பிறகு 100 கோடி வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படம் ஆனது.
விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த முதல் படமும் துப்பாக்கியே ஆகும்.
அதாவது விஜய்யின் துப்பாக்கி படம் தான் கடைசியாக உண்மையாகவே 200 நாட்கள் ஓடிய படமாம். அதன்பிறகு எத்தனையோ பெரிய படங்கள் வந்தும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.
ஆகவே இந்த சாதனையை முறியடிக்க விஜயின் ரசிகர்கள் பெரிதும் செயல்பட்டு வருகின்றனர்.எனவே தளபதி 63 யில் இந்த சாதனை ரசிகர்களால் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.