மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவி பிரபலத்திற்கு விஜய் டீவியில் நடைபெற்ற திருமணம்! வைரல் வீடியோ!
சன் நிறுவனத்தின் ஒரு அங்கமான சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்தார். இவர்களது திருமணத்தை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வீட்டைவிட்டு பிரித்து இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர். தற்போது இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகின்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலை எங்கள் திருமணம், திருமணம் போல் நடைபெறவில்லை. எங்கள் திருமணத்தில் பெரியவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று சோகத்துடன் கூறினார்.
உடனே இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்துவைக்க ஏற்பட்டு செய்யப்பட்டு மணிமேகலைக்கு மீண்டும் தாலி கட்டி உண்மையான திருமணம் போலவே விஜய் டிவி நடத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.