மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெலம்பு காத்துவரட்டும்.. ராதிகா முகத்தில் ஈ ஆடவைத்த பாக்யலட்சுமி..! சுடிதாரில் களமிறங்கிய வைரல் ப்ரோமோ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. வெளிஉலகத்தை அறியாமல் இருந்த பாக்கியலட்சுமி தனது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் இந்த உலகத்தையும், அதில் உள்ள பிரச்சனைகளையும் சவால்களாக எதிர்கொண்டு ஒவ்வொன்றிலும் வெற்றிபெற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவரது முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவியான ராதிகா, பாக்கியலட்சுமியை அவமானப்படுத்துவதாக நினைத்து அவரை தொடர்ந்து சிற்பியாக செதுக்க உதவி செய்கிறார். கடந்த வாரம் அவர் கேண்டினில் பணியாற்றி வரும் அனைவரும் சுடிதார் அணிந்து வர வேண்டும் என்று டாஸ்க் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி, செல்வி உள்ளிட்ட அனைவரும் சுடிதார் அணிந்து வந்துள்ளனர். இதனை கண்ட ராதிகா முகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த ப்ரோமோ தற்போது விஜய்டிவி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.