மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென் மாவட்டங்களுக்கும் உதவி செய்வேன்.. உறுதியளித்த விஜய் டிவி பாலா.!
தென்காசியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் விஜய் டிவி பாலா சிரிப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பின்னர் சந்தித்து பேசிய அவர், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்த மக்களுக்கு என்னிடம் இருந்த 5 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டேன்.
தற்போது தென் மாவட்டங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் மக்கள் ஒவ்வொரு தேவையோடு இருக்கிறார்கள். அதனால் நான் வெறும் கையோடு செல்ல விரும்பவில்லை. நான் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
மேலும், அந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் தாங்கள் திரட்டிய நிவாரணத் தொகையை பாலாவிடம் கொடுத்த நிலையில் அவர் அதை வாங்க மறுத்து தான் தனது பணத்தில் இருந்து உதவி செய்வதாக கூறியுள்ளார்.