ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் முடியப்போகிறதா?.. யாரும் எதிர்பார்க்காத ப்ரோமோ வைரல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தொடர்ந்து சீரியலை அதே கதையை மையமாக வைத்துக்கொண்டு இயக்குவதால் கடுப்பாகி சீரியலை எப்போதுதான் முடிப்பீர்கள்? என்று ரசிகர்கள் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் புகுந்துவிடவே, கண்ணம்மா மற்றும் பாரதி அதனை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை கதைகளமாகக் கொண்டு இந்த சீரியல் ஓடிகொண்டிருக்கிறது. ஆனால் இதையும் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை அட்டக்காப்பி அடித்தால் மட்டும் நம்பிவிடுவோமா என்று ட்ரோல் செய்துதான் வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த வார ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்கு உள்ளே அதிரடியாக போகும் அதிரடிபடையினர் அனைவரையும் காப்பாற்றுகின்றனர். அந்த நேரத்தில் பாரதி எங்கே? என தேடிசென்றார் கண்ணம்மா. அப்போது பாரதியை ஒரு இடத்தில் கட்டி வைத்திருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். பின் அருகில் சென்று அவரை அழைக்கும் போது, எனது உடம்பில் பாம் இருக்கிறது இங்கிருந்து சென்றுவிடு என்று பாரதி கூறுகிறார்.
ஆனால் அதைக்கேட்காது கண்ணம்மா, நீங்கள் வராமல் நான் எங்கும் செல்ல மாட்டேன் எனக் கூறி அவரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டால் இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடுமா?.. சந்தோஷமா இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன் ஒன்றாக போனால்கூட நிம்மதி தான் என்றும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.