#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணம்மா.. என்னம்மா இதெல்லாம்.. சேலையிலையே இவ்வளவு கிளாமரா..! வைரலாகும் புகைப்படம்..
விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துவரும் கண்ணம்மாவின் கலக்கலான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதிலும் சமீப காலமாக இந்த தொடருக்கு ரசிகர்கள் பலமடங்கு அதிகரித்துவிட்டனர். அதற்கு ஏத்தார் போல் பாரதி கண்ணம்மா தொடரும் நாளுக்கு நாள் பல்வேறு விறுவிறுப்புகளுடன் ஒளிபரப்பாகிவருகிறது.
இந்த தொடரின் பெரிய வெற்றிக்கு இந்த தொடரில் கண்ணம்மாவாக வரும் ரோஷிணியும் ஒருவர். மாடலிங் துறையை சேர்ந்த ரோஷினி பாரதி கண்ணம்மா தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் தொடர் என்றாலும் தனது நேர்த்தியான நடிப்பினால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து இன்று புகழின் உச்சத்தில் உள்ளார்.
பொதுவாக பாரதி கண்ணம்மா தொடரில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல், தாவணி, சேலை என குடும்ப பெண்ணாக வலம்வரும் கண்ணம்மா நிஜத்தில் அப்படி கிடையாது. பயங்கர மாடர்ன் மங்கையான இவர் அவ்வப்போது தனது அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சேலை அணிந்து, அதிலும் பயங்கர கிளாமராக அவர் போஸ் கொடுக்க, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், நம்ம கண்ணம்மாவா இது என வியப்புடன் பார்த்து வருகின்றனர்.