திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்கள்.. பிக்பாஸ் பரவசத்தால் விரைவில் End Card..!
பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், விஜய் டிவியின் சீரியலை முடிக்க இருப்பதாக தெரியவருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் 5 சீசன்களை நிறைவுபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.
அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் பிக்பாஸ் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு நேரம் ஒதுக்கிகொடுக்க இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வருவதாகவும் தெரியவருகிறது.
பிக்பாஸ் இரவு 9:30 மணிக்கு மேல் அல்லது 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்பதால் அந்த நேரத்தை கணக்கிட்டு சிப்பிக்குள் முத்து அல்லது பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்டவராக காண்பிக்கப்பட்ட நிலையில், அது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் பாரதிகண்ணம்மா தொடர் வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போதைய சூழ்நிலை அதுவும் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு சீரியல்களும் முடியலாம் என்று கூறப்படுகிறது.