திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அய்யய்யோ... குக் வித் கோமாளி புகழுக்கு என்னாச்சு... சாலை ஓரத்தில் இப்படி அமர்ந்துள்ளாரே... வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காமெடியான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதைத் தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. சமீபத்தில் வெளியான விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் புகழ் தற்போது ராமேஸ்வரம் காலிங் என பதிவிட்டு ரோட்டோரம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் புகழுக்கு என்னாச்சு என்று கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் ராமேஸ்வரம் காலிங் என பதிவிட்டுள்ளதால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் புகைப்படம் எடுத்திருக்கலாம் என தெரிகிறது.