மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: இணையத்தில் செம வைரலாகும் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி பாடிய பாடல்!! அந்த பாடல் வீடியோ இதோ!!
விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி பாடியுள்ள புது பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என தொடங்கி பலர் இன்று தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் ஷிவாங்கி.
எதார்த்தமான பேச்சு, நகைச்சுவை, குழந்தைபோன்ற நடவடிக்கைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்று புகழின் உச்சத்தில் உள்ளார். இவரது இந்த புகழ்ச்சிக்கு அவரது குரலும் கூட ஒரு காரணம்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப்படத்திற்காக ஷிவாங்கி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாம் விஷால் ஆகிய இருவரும் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.
இவர்கள் இணைந்து பாடிய பாடல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.