மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புது காரை வாங்கிய நந்தினி - யோகேஸ்வரன் தம்பதியினர்... விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா.?
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நந்தினி. அதனை தொடர்ந்து பல சீரியலில் நடித்துள்ளார்.
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியலில் நடித்து வருகிறார். நந்தினி சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நந்தினி கடந்த 2019ஆம் ஆண்டு சீரியல் நடிகர் யோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு துருவன் என்ற அழகிய மகன் உள்ளான். இந்நிலையில் தற்போது அவர்கள் ஒரு புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர். கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் காரை தான் அவர்கள் வாங்கி இருக்கின்றனர். இந்த காரின் விலை மட்டும் சென்னையில் 11 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.