மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாட்டியுடன் பியூட்டி..! இணையத்தில் வைரலாகும் ஜாக்குலின் ஜாலி குளியல் வீடியோ..!
கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ஜாக்குலின். குறுகிய காலத்திலையே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பல்வேறு சீசன்களை ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.
தற்போது சீரியல் பக்கம் சென்றுவிட்ட இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும்நிலையில், சீரியல் ஷூட்டிங் போது எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.
அதில், ஜாக்குலின் மற்றும் தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் தொடரில் வரும் பாட்டி இருவரும் தொட்டியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோலவும், தீடீரென பம்புசெட் மோட்டார் ஆன் செய்யப்பட்டு தண்ணீர் கொட்டுவதும், இருவரும் ஜாலியாக குளிப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.