மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கர மாடர்னாக உள்ள விஜய் டிவி காற்றின் மொழி சீரியல் நடிகை! அசத்தல் புகைப்படம் உள்ளே!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பல்வேறு நிகழ்ச்சிகள், சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 100 டிகிரி படத்தின் ஹீரோ, இதற்கு முன் ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி என்ற புதிய தொடரில் நடித்துவருகிறார்.
வாய் பேச முடியாத, தனது தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. இந்த தொடரில் நாயகியாக, வாய் பேச முடியாத பெண்ணாக நடிப்பவர் பிரியங்கா ஜெயின்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் ஒருசில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது காற்றின் மொழி என்ற பெயரில் தமிழிலும், மௌனராகம் என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே கதையில் நடித்துவருகிறார்.
காற்றின்மொழி தொடரில் வாய் பேச முடியாத பெண்ணாக, பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக வளம் வரும் இவரது பயங்கர மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அவரா இது? என கேட்கும் அளவிற்கு பயங்கர மாடர்னாக உள்ளார் ப்ரியங்கா ஜெயின்.