மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி பிரபல சீரியல்! ஹீரோ வெளியிட்ட தகவலால் சோகத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் விஜய் டிவி தொடர்களுக்கென இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் காற்றின் மொழி. இத்தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் மற்றும் ஹீரோயினாக கண்மணி என்ற வாய்பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் பிரியங்கா ஜெயின் நடித்து வந்தார்.
அன்பு, காதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் இது குறித்து ஹீரோ சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், காற்றின் மொழி சீரியல் முடிய போகிறது என்பது உண்மையான செய்திதான். மேலும் ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிகிறீர்கள், கதை இன்னும் நிறைய இருக்கு. இனி தான் டிஆர்பி நல்லா வரும் என தினமும் 100+ மெசேஜ் வருகிறது. அதெற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
ஏப்ரல் 10 காற்றின் மொழி சீரியல் முடிவடைகிறது. அதன் ஷூட்டிங்கெல்லாம் முடிந்துவிட்டது. என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் பற்றி விரைவில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.