திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் வீட்டில் நுழையும் விஜய் டிவி காமெடி நடிகர்.. போட்டோ மூலம் உறுதியான தகவல்.!
பிக்பாஸ் சீசன் 7ல் கலக்கப்போவது யாரு பிரபலம் குரேஷி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் முக்கியமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 7 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த சீசனில் பிக் பாஸ் 2 வீடுகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்களாக கிரண், அப்பாஸ், டிரைவர் ஷர்மிளா, பப்லு, தினேஷ், வி.ஜே பார்வதி, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி பிக்பாஸில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் குரேஷி தனது சமூக வலைதள பக்கத்தில், கமலின் பெரிய பேனர் முன் நின்று விரைவில் பிக்பாஸ் சீசன் 7 என பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதை உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.