"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
சூடுபிடித்த விஜய் டிவி நீயா நானா.. மாமனாரிடம் வேலை பார்ப்பது தவறா..? பொங்கி எழுந்த நபர்.. வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் தொலைக்காட்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கோபிநாத் தொகுத்துவழங்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.
வாரம் வாரம் புது புது டாபிக்குடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் வீட்டோட மாப்பிளை தேவை.. வீட்டோட மாப்பிளை எதிர்பார்ப்பு தவறானது.. என்ற டாபிக் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், எங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளையா வந்த, எங்க பிஸினஸா டெவலப் பண்ணிக்க முடியும் என ஒருத்தர் கூற, அதற்கு எதிர் திசையில் இருப்பவர், உங்க பொண்ண ஒருத்தவங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறீங்களா? இல்லை உங்க பிஸினஸா இன்னொருத்தவங்களுக்கு குடுக்குறீங்களாக என பதில் கூறுகிறார்.
இதற்கு பதிலளிக்கும் அந்த நபர், யாரோ ஒருவரிடம் அடிமையாக வேலை பார்ப்பதற்கு பதில், சொந்த மாமனாரிடம் வேலை பார்க்க மாட்டியா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுவதும் சரியாகத்தான் இருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்தினை பதிவிடுவருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி. நீங்களும் உங்கள் கருத்தை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.