ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. இனி 6 நாளும் ஜாக்பாட்தான்.. விஜய் டி.வி சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.!
தமிழில் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் கடந்த மூன்று வாரங்களாக பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 நெடுந்தொடர்கள் மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தன.
இந்த மகாசங்கமம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து வாரம் ஐந்து நாட்கள் இதுவரையிலும் ராஜாராணி 2 ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சனிக்கிழமை இரவு 09:30 மணி முதல் 10 மணி வரை ராஜாராணி 2 ஒளிபரப்பாக இருக்கிறது.
அதில் நேற்றைய எபிசோடில், தனது மருமகள் சந்தியா பேச்சை மீறி படிப்பு பக்கம் செல்வதை விரும்பாத சிவகாமி, ஹால்டிக்கெட்டை ஒளித்து வைத்துவிடுகிறார். அதனை மற்றவர்களுக்கு தெரியாமலும் பார்த்துக் கொள்கிறார்.
ஆனால் சிவகாமியின் கணவர் ரவிக்கு சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில் சிவகாமி ஹால்டிக்கெட்டை சந்தியாவிடம் கொடுப்பாரா? இல்லையா? என்பதை பொறுமையாக அடுத்த வாரம் எபிசோடுகளில் காணலாம்.