விஜய் டிவி ரின்சனா இது? எப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டார் பாருங்க! புகைப்படம்.



vijay-tv-rinson-current-photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் ரின்சன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவி மேடையில் இவர் செய்துள்ள சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம்.

சிறப்பாக நடனமாடிவந்த இவருக்கு ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் மில்லி மீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

vijay tv

நண்பன் படத்தை அடுத்து சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டைசுழி,பா. பாண்டி உட்பட பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார் ரின்சன். தற்போது குறும்படங்களில் அதிகம் கவனம் செலுத்திவரும் இவருக்கு பட வாய்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கிறதாம்.

இந்நிலையில் விஜய் டிவி, நண்பன் படத்தில் பார்த்த ரின்சன் போல் இல்லாமல் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் ரின்சன். இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில.

vijay tv

vijay tv