திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்! கண்கலங்கிய பிரபலங்கள்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. இவர் நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அனைத்து காமெடிகளிலும் அ சால்டாக கலக்கியுள்ளார். பின்னர் சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் ஒருசில வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 45 வயது நிரம்பிய அவர் கடந்த சில முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, கை கால்கள் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 10ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேலு பாலாஜியின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#KPY #GrandFinale - Sunday @ 1:30 pm #VijayTelevision pic.twitter.com/60mQZ8SNVx
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020
இந்த நிலையில் வடிவேலு பாலாஜியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி அவரை கவுரவப்படுத்தும் வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு கொடுக்க வடிவேலு பாலாஜியின் புகைப்படம் பதித்த விருதினை தயார் செய்துள்ளனர். இதனை கண்டதும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் அனைவரும் கண்கலங்கினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.