திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவின் புதிய கலக்கல் புகைப்படங்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். அதில் ஒருவர்தான் VJ ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா.
விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா.
இந்நிலையில், சமீபத்தில் ரம்யா ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
When in doubt , I choose black 🖤. pic.twitter.com/vLesM9I7IM
— Ramya Subramanian (@ramyavj) March 9, 2019