தளபதி 68 படத்திற்க்காக அமெரிக்கா சென்றுள்ள விஜய்.! வைரலாகும் புகைப்படங்கள்..



Vijay went to America for his next movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள "லியோ" திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது அதன் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.

vijay

இந்நிலையில், விஜய் நடிக்கப்போகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இப்போதே வெளியாகிவிட்டது. "தளபதி 68" படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay

தற்போது தளபதி 68 படத்தின் பணிக்காக விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் எடுக்கப்பட்ட விஜயின் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.