#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு நானே கொடுத்த தண்டனை.! லைகர் தோல்வியால் இப்படியொரு முடிவை எடுத்த விஜய தேவரகொண்டா!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜயதேவர கொண்டா. இவர் பான் இந்தியா நடிகராக, இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். இவருக்கென பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் லைகர்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி பான் இந்தியா அளவில் வெளிவந்த இப்படம் முதல்நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை தழுவியது. மேலும் பல கேலி, ட்ரோல்களுக்கு உள்ளானது.அதனைத் தொடர்ந்து விஜய தேவரகொண்டா படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் தற்போது பேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பட பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் லைகர் படத்தின் தோல்வி உங்களுக்கு கற்று தந்த பாடம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என்னுடைய நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், இனி படம் வெளியாவதற்கு முன்பு ரிசல்ட் குறித்து பேசக்கூடாது என முடிவு எடுத்துள்ளேன். இது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என கூறியுள்ளார்.