#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு அதெல்லாம் வேணாம்.! என் பேரே போதும்.! விஜய் தேவரகொண்டா கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஃபேமிலி ஸ்டார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் ஹீரோயினாக, அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் படம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா பட பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டாவிடம் உங்கள் பெயருக்கு முன்னால் ஏன் எந்த பட்டப்பெயரையும் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் விரும்பும் பெயர்கள் அனைத்தும் ஏற்கனவே மற்ற நடிகர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. தல, தளபதி, தலைவர், சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், ரைசிங் ஸ்டார் என அனைத்தும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நான்கு படங்களின் போது கூட தயாரிப்பாளர்கள் பட்டப்பெயர்கள் எதாவது என் பெயருக்கு முன்னால் வைக்க கேட்டார்கள். ஆனால் அதை நான் விரும்பவில்லை.
என் பெயர் மட்டுமே எனக்கு போதும். எனது அம்மாவும் அப்பாவும் எனக்கு வைத்த இந்த பெயரால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரே ஒரு விஜய் தேவரகொண்டாதான் அது நான்தான் என கூறியுள்ளார்.