திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் விஜயகாந்த்.. மருத்துவமனை அறிக்கை.!
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.