திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது நம்ம கேப்டனுக்கு அந்த இடத்தில் எலும்பு இல்லையா?? உண்மையை உடைத்த மகன்.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமின்றி, அரசியலிலும் மாபெரும் பிரபலமாக வலம் வந்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் நாட்டுப்பற்று மற்றும் சமூக நலம் கொண்ட பல படங்களில் நடித்து ரசிகர்களால் கேப்டன் எனக் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். நடிகராக மக்கள் மனதை கவர்ந்த அவர் பின் அரசியலில் களமிங்கினார்
நாளடைவில் சினிமாவை விட்டுவிலகி முழுவதுமாக தனது கவனத்தை அரசியலில் செலுத்தி வந்த அவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வருகிறார். கம்பீரமாக கர்ஜனை குரலோடு வலம் வந்த அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டவர். சண்டைக் காட்சிகளில் கூட டூப்பு இல்லாமல் இவரே உண்மையாக நடிப்பாராம்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தனது அப்பா குறித்து கூறுகையில், படம் ஒன்றில் நடித்தபோது ஆக்சன் காட்சியில் துப்பாக்கியால் அவரை சூடும் காட்சி இருந்துள்ளது. அப்பொழுது திடீரென எதிர்பாராதவிதமாக எதிரே சுட்டவரிடம் கையில் உண்மையான துப்பாக்கி இருந்துள்ளது. அந்த துப்பாக்கி குண்டு விஜயகாந்த் கண்புருவத்தில் துளைத்து சென்றுவிட்டதாம். அதனால் தற்போது வரை அந்த இடத்தில் அவருக்கு எலும்பு இருக்காது என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே ஷாக் கொடுத்துள்ளது.