"அவர் அளித்த நிலத்துக்கு அவரின் பெயரே சரி" - மலர்ந்தது விஜயகாந்த் காலனி.. மக்கள் நெகிழ்ச்சி.!



Vijayakanth fans name into their land vijayakanth kalani

 

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தனது 71-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

மறைந்த விஜயகாந்த் அவர்கள் பொதுமக்களுக்கும், திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் செய்த நன்மைகள் ஏராளம். இதனால் அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியது.

பலரும் தங்களது பகுதியில் இருந்தவாறு விஜயகாந்தின் போஸ்டரை பயன்படுத்தி, அஞ்சலி செலுத்தி தங்களின் மனவேதனையை வெளிப்படுத்தினர். 

vijayakanth

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் விஜயகாந்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மக்களுக்கு விஜயகாந்த் இலவசமாக வழங்கியிருந்தார். 

இந்த நிலத்தில் 50 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். விஜயகாந்தின் மறைவை அறிந்து சோகத்தில் ஆழ்ந்துபோன அனைவரும் அவரின் நினைவாக, இந்த பகுதிக்கு "விஜயகாந்த் காலனி" என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.