திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நன்றிதான் இல்ல.. உதவி செய்த விஜயகாந்த் மீது அக்கறையும் இல்லையா?.. தளபதி விஜயிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகின் கருப்பு எம்ஜிஆர், புரட்சி கலைஞர், கேப்டன் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரால் வாழ்ந்த பல திரைப்பட கலைஞர்களின் குடும்பங்கள் ஏராளம். விஜயகாந்தின் திரையுலக பயணம் பல கஷ்டங்களுக்கு நடுவில் போராட்டங்களுக்கு பின் கை கூடியது.
அதேபோல திரையுலகில் வளர்ந்து வந்த பின்னும், கடைநிலை தொழிலாளி வரை அனைவருக்கும் சரிசமமாக போராடி பல குடும்பங்களில் இன்றளவும் மூன்று வேளை உணவுக்கு முக்கிய காரணமாக இருந்து வந்தவர்.
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.!
— Suriya Sivakumar (@Suriya_offl) December 3, 2023
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!
அவரின் அரசியல் பயணத்திற்கு பின் எழுச்சி, வீழ்ச்சி என பல பிரச்சனை இருந்தாலும் திரைப்படத் துறையில் பணியாற்றும் போது தனது இறுதிகட்ட காலங்களில் அந்த சமயம் அறிமுகமான புதுமுக நடிகர்களான சூர்யா, விஜய் என பலரின் உச்சகட்ட வாழ்க்கைக்கு தன்னலமின்றி பொதுநலத்தோடு உதவி செய்தவர்.
தற்போது உடல்நல குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பூரணநலம் பெற வேண்டி நடிகர் சூர்யா உட்பட பலரும் தங்களது பிரார்த்தனையை பதிவு செய்திருந்தனர். ஆனால் தளபதி விஜய் அது தொடர்பான எந்த பதிவும் இடாததால் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.