திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேப்டன் கேப்டன் தான்: கஜா புயலுக்காக அதிகம் நிவாரணநிதி கொடுத்த நடிகர் விஜயகாந்த் தான்!. தொகை எவ்வளவு தெரியுமா?
விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். பின் அரசியலில் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவர் என்பது வரை உயர்ந்தவர். சமீப காலமாக இவர் உடல்நலம் முடியாமல் இருந்து வருகின்றார், இருந்தாலும் மக்களுக்காக அவ்வபோது குரல் கொடுத்து வருகின்றார்.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கஜா புயலுக்காக ரூ 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை விஜயகாந்த் அனுப்பி வைக்கவுள்ளாராம். நடிகர்களிலேயே அதிக தொகை கொடுத்தது தற்போது விஜயகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.