திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கடவுளே.. கேப்டன் விஜயகாந்தின் உடலில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?.. மனவேதனையுடன் அவரது மகன் கூறிய அதிர்ச்சி தகவல்..!!
கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்தில் இன்று வரை இருந்து வருபவர் விஜயகாந்த். இவர் தனது நடிப்பு திறமையால் இன்றளவும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனைப் போல அவரின் உள்ளமும் பூப்போன்று மென்மையானது. ரஜினி, கமல், சரத்குமார், பிரபு போன்ற நடிகர்கள் உச்சகட்டத்தில் இருந்தபோதே இவர் தனி ஒருவராக ஜெயித்துக்காண்பித்தார்.
பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியான சகாப்தம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பின், திரையிலிருந்து உடலுக்கு குறைவால் விலகிக்கொண்டார். பின்னர் முழுநேர அரசியலில் களமிறங்கிய நிலையில், சில ஆண்டுகள் கழித்து அவரின் உடல்நலகுறைவால் அரசியல் இருந்தும் விலகிககொண்டார்.
அவ்வப்போது தனது தொண்டர்களிடம் உரையாடுவார். இவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சண்முக பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், "எனது அப்பா தீவிர உழைப்பாளி. காலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருக்கவேண்டும் என்றால், 5:30 மணிக்கு சென்றுவிடுவார். அரசியலுக்கு வரும்முன் முழுநேர சினிமாவில் தீவிரமாக இருந்தார்.
அவர் எப்போதும் வீட்டிலேயே பெரும்பாலும் இருக்கமாட்டார். ஆனால் வீட்டிற்கு வந்தால் எங்கள் இருவரையும் அழைத்து அன்புடன் விளையாடுவார். எங்களுக்கென்று எந்த அளவிற்கு நேரம் ஒதுக்க முடியுமோ அதனை ஒதுக்கி செயல்படுவார். அத்துடன் எங்கள் வீட்டில் 2 நாய்களையும் வளர்த்து வந்தார். அந்த நாய்களிடமும் அன்புடன் பேசி விளையாடுவார்.
அதற்கு பின்னரே அவர் இயல்புநிலைக்கு திரும்புவார். படப்பிடிப்புகளின் போது அவரது கால்களில் காயம் ஏற்பட்டு கட்டுகள் நிறைய இருக்கும். ஒரு படத்தில் டம்மி துப்பாக்கி வைத்து சுடும் சமயத்தில், சுடுபவர் சோதனையாக அழுத்தியபோது அப்பாவின் கண்களின் அருகில் குண்டு பாய்ந்தது. இதனால் அவரது கண்ணுக்கு கீழ் புருவத்தில் எலும்பு இருக்காது" என்று மனவேதனையுடன் தெரிவித்தார்.