விஜயராஜாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்தாக மாறியது எப்படி தெரியுமா?.. விபரம் இதோ.!!



vijayakanth name reason


தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வந்தவர் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றும் கமலுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ, அதே அளவிற்கு விஜயகாந்திற்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். 

cinema news

திரையில் மட்டுமின்றி தனது நிஜவாழ்க்கையிலும் இவரை பலர், ரியல் ஹீரோ என்றுதான் அழைப்பர். ஏனெனில் உதவி என்று யார் கேட்டாலும், உடனடியாக செய்து விடும் தங்கமான மனதை கொண்டவர் விஜயகாந்த். இவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் அழைப்பர். விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜ். அவருக்கு விஜயகாந்த் என எப்படி பெயர் வந்தது என்பது குறித்து காணலாம்.

முதன்முதலில் எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து வியந்த விஜயராஜ் சினிமாவிற்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் அவரை, "உனக்கு பேசவே தெரியாது. கருப்பா இருக்க" போன்ற காரணங்களை கூறி உதறித்தள்ளியது. இதன் பின் கதாநாயகனாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த விஜயராஜுக்கு "இனிக்கும் இளமை" என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

cinema news

இதனை தொடர்ந்து அகல்விளக்கு என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். இருப்பினும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவர் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை" படம்தான் அவருக்கு தமிழ் சினிமாவில் தனிமுத்திரை பதித்த படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர் தான் விஜயராஜாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்தாக மாறினார்.