திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. கியூட் பேமிலி.. மனைவியுடன், மகனை கையில் தூக்கிகொண்டு போஸ் கொடுத்த விஜயகாந்த்..!
கோலிவூட்டில் 80s, 90sகளில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவரது நடிப்பில் வெளிவந்த ஹானஸ்ட் ராஜ், ரமணா, சத்ரியன், சிறைக்குள் பூத்த சின்னமலர் போன்ற படங்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
முன்பெல்லாம் விஜயகாந்த் படம் எப்போது போடுவார்கள் என எண்ணி ரசிகர்கள் தியேட்டர் வாசலிலேயே காத்துக்கிடப்பர். இவரை திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பலர், ரியல் ஹீரோ என்று தான் அழைப்பர்.
ஏனெனில் உதவி என யார்கேட்டாலும் உடனடியாக செய்துவிடும் நல்ல மனதை கொண்டவர். இதனைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன் பின் முழுநேரமும் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.
ஆனால் தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் மீண்டும் விஜயகாந்த் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் தனது மகனை தூக்கிக்கொண்டு மனைவி பிரேமலதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.